நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பிறகு நிகராக யாராலையும் நடிக்கமுடியாது, காலத்தால் அழியாத காவியம்.
நடிகர் சிவாஜி கணேசன் நவரசத்தையும் உள்ளடக்கியவர். நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பையும் பாவங்களையும் பார்த்து வியக்காத ஆட்களே இல்லை. சிவாஜி அளவுக்கு நடிக்க யாராலும் இயலாது. கமல்ஹாசன் மட்டும்தான் சிவாஜிகணேசன் மாதிரி நடிக்கிறார் என்ற பெயரை பெற்றிருக்கிறார். கமல்ஹாசன் “தசாவதாரம்” படத்தில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த ஒன்பது வேடங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கும். இந்த படத்திற்காக பல மணி நேரத்தை மேக்கப்பிற்காக செலவழித்தார். இதற்காக இவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதைப் பார்த்த அனைவரும் அவரை பாராட்டினார்கள்.
ஆனால் சிவாஜி கணேசன் அப்பொழுதே இந்த அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறார். நவரசப்படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நவரசங்களையும் வெளிப்படுத்தி நடித்திருப்பார். படத்தின் இறுதியில் ஒன்பது நவரசங்களையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியவாறு நடித்திருப்பார். இதற்காக சிவாஜி கணேசன் புகழையும் பல விருதுகளையும் பெற்றார். இந்தப்படத்தில் சிவாஜிகணேசன் நடித்திருக்கும் வேடங்களை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது.