நடிகர் சிவாஜி கணேசன் கதாநாயகனாக மட்டுமல்லாது சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நடிகராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டவர் சிவாஜி கணேசன். இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். அதன்படி கடந்த 1953-ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் டி.வி.நரசிம்ம பாரதி நடிப்பில் ‘திரும்பிப்பார்’ படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் பரந்தாமன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான துளி விஷம் படத்தில் சிவாஜி கணேசன் சூரியகாந்தன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் கே.ஆர்.ராமசாமி, கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன்பின் சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அந்தநாள் படத்தில் ராஜன் என்ற வில்லன் வேடத்தில் சிவாஜி நடித்திருந்தார். பண்டரிபாய், டிகே பாலச்சந்திரன், ஜாவர், சீதாராமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் பாடல்கள் இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 1956-ஆம் ஆண்டு வெளியான ரங்கோன் ராதா படத்திலும் சிவாஜி கணேசன் வில்லனாக நடித்திருந்தார்.