ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவா, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு இருவரும் இணைந்து கலகலப்பு, கலகலப்பு-2 ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் . இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
இதை தொடர்ந்து யோகி பாபு, சிவா இருவரும் இணைந்து நடித்துள்ள சுமோ, சலூன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் சிவா, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுஆர்.கண்ணன் தள்ளிப் போகாதே, எரியும் கண்ணாடி ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.