Categories
தேசிய செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விதிமுறைகளை மாற்ற முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.‌ இந்த சிவில் சர்வீஸ் தேர்வு 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என நடைபெறும். இந்தத் தேர்வில் SC, ST பிரிவினருக்கு வயது வரம்பு 37 ஆகவும், OPC பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 31 ஆகவும் உள்ளது. இந்நிலையில் பொதுப்பிரிவினர் 6 முறையும், SC, ST பிரிவினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். இதனையடுத்து இதர பிரிவினர்கள் 9 முறை தேர்வு எழுதலாம். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக வயது வரம்பு மற்றும் தேர்வு எழுதுவதில் கூடுதல் தளர்வு அளிக்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவைக்கு‌ ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது கொரோனா பரவல் காரணமாக சிவில் தேர்வுகளில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்த பிரச்சனை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி வயதுவரம்பு மற்றும் கூடுதல் தேர்வு எழுத்துவதற்கான  தளர்வுகள் வழங்கப்படமாட்டாது. மேலும் யு.பி.எஸ்.சி, தேர்வுகளின் அறிவிப்பு வெளியான பிறகே வினாத்தாள்கள் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

Categories

Tech |