இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.ஆனால் நாட்டின் மிகப்பெரிய அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் இருந்து 5 முதல் 7 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற சிவில் தேர்வில் 2014 ஆம் ஆண்டு 10%, 2015 ஆம் ஆண்டில் 8%, 2016 ஆம் ஆண்டில் 7%, 2017 ஆம் ஆண்டு 4% மற்றும் 2018 ஆம் ஆண்டில் 5% மட்டுமே தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் தேர்வில் மொத்த 761 பணியிடங்களில் 36 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் சிவில் தேர்வில் குறைவான நபர்கள் மட்டும் தேர்ச்சி பெறுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இதில் சிவில் தேர்வில் வினாத்தாள்கள் தமிழ் மொழியில் இல்லாததும், தமிழில் புத்தகங்கள் இல்லாததும் மற்றும் முறையான மதிப்பீட்டாளர்கள் இல்லாததும் காரணமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் சிவில் தேர்வுக்கான பயிற்சி மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் அவர்களுக்குக் தனிப்பட்ட பயிற்சி கிடைக்கவில்லை. மேலும் பள்ளிக்கல்வியில் முறையில் ஆய்ந்தறியும் கற்பித்தல் முறை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.