Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வை  நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு இந்தியா முழுவதிலும் இருந்து 5  லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல் கடந்த ஜூன் மாதம் 5-ஆம்  தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் 13 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், தமிழகத்தில் மட்டும் 610 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் முதல் நிலை தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வு இந்த மாதம் 16, 17, 18, 24, 25 ஆகிய தேதிகளில் நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நமது தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இதற்காக 2  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வில் ஏ. பி பிரிவுகளில் இருந்து தலா 4  கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாடிக்குள்  பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்பட்ட 8  வினாக்களும்  புரிந்து பதிலளிக்க கூடிய வகையில் நேரடி வினாக்களாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். மேலும் இன்று காலை பொதுப்பாடம் 1-க்கான தேர்வும்  , பிற்பகல் பொதுப்பாடம் 2-க்கான      தேர்வும்  நடந்தது. மேலும் நாளை காலை பொதுப்பாடம் 3-க்கான  தேர்வும் , மதியம் பொதுப்பாடம் 4-க்கான  தேர்வும்  நடைபெற உள்ளது.

Categories

Tech |