Categories
தேசிய செய்திகள்

சிவ ருத்ர நடன நிகழ்ச்சி…. நடனம் ஆடியபடி மேடையில் உயிரை விட்ட கலைஞர்…. பெரும் சோகம்….!!!!

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜம்முவின் பிஷ்னாஹ் டெஹில் பகுதியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில், 20 வயது யோகேஷ் குப்தா என்பவர் சிவ ருத்ர நடனமாடிக் கொண்டிருந்தார். அதாவது சிவருத்ர நடன நிகழ்ச்சியின்போது யோகேஷ் பார்வதி போல மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு மேடையில்  சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது யோகேஷ் மேடையிலேயே சரிந்து விழுந்தார்.

இதற்கிடையில் நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை முட்ட, நடனத்தின் ஒரு அசைவு தான் அவர் படுத்திருப்பது என நினைத்திருந்தனர். எனினும் அவர் எந்த கரகோஷத்துக்கும் அசையவில்லை. அதன்பின் மேடைக்கு அருகே இருந்தவர்கள் ஓடிச்சென்று அசைவற்று இருந்த யோகேஷ் குப்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். இவ்வாறு இசைக் கலைஞர் நடனமாடியபடியே உயிரிழந்த விடியோ சமூகவலைத்தளங்களில் பலராலும் கவலையோடு பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |