இயற்கை எரிவாயு மீதான கூட்டுவரி மதிப்பை குறைப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் காய்கறி விலை, பெட்ரோல் விலை, தங்கம் விலை என பணவீக்க பிரச்சினைகள் பொது மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக முக்கியமான அறிவிப்பு மகாராஷ்ர மாநில அரசு வெளியிட்டுள்ளது. அந்த மாநில பட்ஜெட் அறிக்கையில் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மீதான கூட்டு வரி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 13.5 சதவீதம் வரை நடைமுறையில் இருந்தது. இயற்கை எரிவாவிற்கான வரி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையும் மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைப்பின் விளைவாக இயற்கை எரிவாயு கிலோ ஒன்றுக்கு 5.75 சதவீதம் வரை குறையும் என நம்பப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 மாதங்களில் மட்டும் cng கேஸ் விலை 20 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது.இருப்பினும் 2021 வருட ஜூலை மாதத்திலேயே கிலோவுக்கு 2.58 குறைப்பதாக மாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அப்போது கேஸ் விலை கிலோவுக்கு 50 க்கும் குறைவாக உள்ளது. ஆனால் அக்டோபர் மாதத்தில் மீண்டும் 22 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் கேஸ் விலை ரூபாய் 54. 57 ஆக உயர்ந்துள்ளது. அதன்பின் நவம்பர் மாதத்தில் கேஸ் விலை மீண்டும் ரூ. 3.06 உயர்த்தப்பட்டது. டிசம்பர் 17 ஆம் தேதியிலும்கேஸ் விலை உயர்ந்தது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.