சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சிஎஸ்கே அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி, வீரர்கள் செல்லும் பேருந்தில் கிளீனர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், தோனி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். இதனால் நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.