சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில்சென்னை சூப்பர் கிங்ஸ்சின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதை காண ஆவலோடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
13வது ஐ.பி.எல் தொடர் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆட்டத்தில் களமிறங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த வீரர்கள் கேப்டன் தோனி, ரெய்னா, ராயுடு, சாவ்லா, ஹர்பஜன் ஆகியோர் சேப்பாக்க மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இதை தொடர்ந்து அங்கு நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை காண்பதற்காக ஆவலோடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்பொழுது அங்க இருந்த பாதுகாப்பையும் மீறி மைதானத்தில் ரசிகர்கள் நுழைந்தனர். அதில் ஒருவர் கேப்டன் தோனி காலில் விழுந்தார். இந்நிலையில் அங்கு கொஞ்சம் நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அந்த ரசிகரை மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் கூட்டி சென்றனர்.