Categories
மாநில செய்திகள்

சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!

சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை விளைவாக தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. நாளை இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருந்தனர். இந்நிலையில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த உள்ளதால் சட்ட ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது என கூறி வாராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போராட்டம் நாளை நடைபெற உள்ளதால் இந்த மனுவை அவரசமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதனை காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள் என்றும் கூறினர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல் ஆய்வாளர் 4 வாரத்திற்கும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர் மார்ச் 11ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதுவரை போராட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளனர்.

Categories

Tech |