சி.பி.எஸ்.இ அதாவது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 வது பருவ 2 தேர்வுகளின் தேதி தாளை வெளியிட்டு இருக்கிறது. 2ஆம் பருவத்தேர்வில் மீதம் உள்ள 50 சதவீத பாடத்திட்டத்திலிருந்து மாணவர்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். சி.பி.எஸ்.இ 10-வது தேர்வுகள் ஏப்ரல் 26- மே 24 வரை நடைபெறும். மற்றொரு புறம் 12வது தேர்வுகள் (CBSE Term 2 Exam 2022) ஏப்ரல் 26-ஜூன் 15 வரை நடைபெறும். இதில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் (சி.பி.எஸ்.இ Term 2 Exam) காலை 10.30 மணிக்கு தொடங்கும்.
அப்போது வினாத்தாளில் புறநிலை மற்றும் அகநிலை அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் மனதில் கொள்ளவேண்டும். இதனிடையில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் (அல்லது) தேர்வுமுறை தொடர்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் மாதிரித் தாளைப் பயன்படுத்தி தேர்வு முறையைப் தெரிந்துக்கொள்ளலாம். 12-வது பாட மாதிரி தாள்களுக்கான நேரடி இணைப்பு கீழே இருக்கிறது. ஆகவே கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் வாயிலாக மாதிரி தாள்களை பெறலாம்.
1. உயிரியல் மாதிரி வினாத்தாள் – Biology
2. வணிக ஆய்வுகள் மாதிரி வினாத்தாள் – Business Studies
3. வேதியியல் மாதிரி வினாத்தாள் – Chemistry
4. கணினி அறிவியல் மாதிரி வினாத்தாள் Computer science
5. பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் – Economics
6. ஆங்கில கோர் மாதிரி வினாத்தாள் – English Core
7. ஆங்கில தேர்வு மாதிரி வினாத்தாள் – English Elective
8. புவியியல் மாதிரி வினாத்தாள் – Geography
9. ஹிந்தி தேர்வு மாதிரி வினாத்தாள் – Hindi Elective
10. ஹிந்தி கோர் மாதிரி வினாத்தாள் – Hindi Core
பிற பாடங்களுக்கான மாதிரித் வினாத்தாள்களைப் பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். மேலும் சி.பி.எஸ்.இ மாதிரி வினாத்தாள்களுக்கு இங்கே கிளிக் செய்ய வேண்டும்.