மகாராஷ்டிராவில் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் சிபிஐ விசாரணை நடத்த அளித்திருந்த ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ டெல்லியை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் பொது ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இந்த நிலையில் சிபிஐக்கு ஏற்கனவே வழங்கியிருந்த ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. தொலைக்காட்சி டி.ஆர்.பி தொடர்பான வழக்கை மகாராஷ்டிராவில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த உத்தரவை திடீரென பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான் சத்தீஸ்கர் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதல் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.