Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள செங்கல்புதூர் கிராமத்தில் கூலித்தொழிலாளியான பொன்னுசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு ஆதிவாசியான பொன்னுசாமி மீது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவன் மீது வனத்துறையில் 7 வழக்குகளும், காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கிறது. விசாரணைக்காக பொன்னுசாமி குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் யானை தந்தம் கடத்தல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

இதனால் சி.பி.ஐ அதிகாரிகள் பொன்னுசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு பயந்து மன உளைச்சலில் இருந்த பொன்னுசாமி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொன்னுசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |