அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக திமுக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி வி சண்முகத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வருகின்றன. வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளில் அவரது தலையை வெட்டி தொங்க விடுவோம் என்று மிரட்டுகின்றனர். அவர்களை யார் தூண்டி விடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.