தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொன்னது தற்போது வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் ஷாம் நான் திடீர்னு ஹீரோவாக மாறிய போது விஜய் அண்ணாவை பார்த்தேன். அப்போது வரும்போதே 2 குதிரை ஜோதிகா, சிம்ரன் யாருடா நீ என்று கேட்டார் என்று கூறினார்.
அதாவது நடிகர் சாம் அறிமுகமான 12 பி என்ற திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் சிம்ரன் என 2 டாப் ஹீரோயின்களுடன் நடித்தார். ஹீரோவாக அறிமுகமான படத்தில் டாப் ஹீரோயின்களுடன் ஷாம் நடித்தது அப்போது மிகவும் பரவலாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் நடிகர் விஜய் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை இரண்டு குதிரை என்று சொன்னதாக அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தை நடிகர் சாம் கேஷுவலாக கூற தற்போது அது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் நடிகர் விஜயை சமூக வலைதள வாசிகள் பலரும் வறுத்தெடுக்கின்றனர்.