Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க! லேட் பண்ணாதீங்க!…. அதிகரிக்கும் போர் பதற்றம்…. உச்சகட்ட நடவடிக்கையில் உலக நாடுகள்….!!

உக்ரைன் ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னாள்  சோவியத் ஒன்றிய நாடான  உக்ரைனை  நோட்டா அமைப்பில் சேர கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும்  நோக்கத்தில் தான் ரஷ்ய படைகளை குவிப்பதாக அமெரிக்கா குறைக்கூறி  வருகிறது.

இதனை ரஷ்யா மறுக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில் “சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும். இதனால் வருகிற 20-ஆம் தேதிக்கு முன் ரஷ்யாவின் மீது படையெடுக்கலாம். அதன்படி வரும் 16ஆம் தேதி ரஷ்யா படையெடுப்பை தொடங்கும் என தெரிகிறது” என்கின்றனர்.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் மேற்கத்திய நாடுகளுடன் தொலைபேசி வழியாக உரையாடல் நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் இந்த தேதியை குறிப்பிட்டு கூறினார் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “படையெடுப்பு வான்வெளி குண்டு வீச்சுகளுடன் தொடங்கலாம். இது புறப்படுவதை கடினமாக்கும் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே தாமதிக்காமல் உடனடியாக வெளியேறுவது நல்லது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை காலி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகின்றது. இதனிடையே படையெடுப்பு குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை  தொடர்ந்து உலக நாடுகள் பலவும்  உக்ரைனிலிருக்கும்  தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தி  வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக போலந்து நாட்டின் எல்லைக்குள் அமெரிக்கா கூடுதலாக 3 ஆயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |