புதிய ரேஷன் கடை கட்டிதரக்கோரி பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நல்லியாம்பாளையம் புதூர் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில் அதே பகுதியில் புது ரேஷன் கடை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அங்கு ரேஷன் கடை கட்டப்படவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இடத்தை பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக ரேஷன் கடை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தாசில்தார் கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின்னரே ஆர்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.