கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த தம்பதியினர் கண்ணன்(35)- முத்துலட்சுமி(29). கண்ணன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி முத்துலட்சுமி உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் பொறுங்கள் உணவு ரெடியாகி விடும் என்று முத்துலட்சுமி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் வேலைக்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் சீக்கிரம் சமையல் செய்ய மாட்டாயா? என்று கண்ணன் முத்துலட்சுமியை திட்டியுள்ளார். பின்னர் ஹோட்டலில் நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். கணவன் திட்டிவிட்டு சென்றதால் மன வேதனையடைந்த முத்துலட்சுமி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் முத்துலட்சுமியின் தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.