கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மற்றும் நடிகையுமான குஷ்பு பிராத்தனை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்றின் தொடக்க நிலை இருந்ததாக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதிி செய்யப்பட்டது. தற்போது என் உடல்நிலை நலமாக உள்ளது இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சிகிச்சை பெற்று வருகிறேன்.
மேலும் கடந்த சில நாட்களாக என்னுடன் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் பிரபல நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சருக்கு பிரார்த்திப்பதாக கூறி இருந்தார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “நமது உள்துறை அமைச்சர் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன், சீக்கிரம் தேறி வாருங்கள், நீங்கள் குணமாக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.