Categories
சினிமா தமிழ் சினிமா

சீக்கிரம் மீண்டு வாங்க பாலு சார்… நடிகர் ரஜினியின் உருக்கமான வீடியோ பதிவு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட்டும் தமிழ் சினிமாவில் இருக்கின்றது. ரஜினியின் சமீபத்திய படங்களான பேட்டை மற்றும் தர்பார் போன்ற படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர் பற்றி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, ” இந்திய மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சார் கொரோனாவால் மருத்துவமனையில் தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |