பெண் ஒருவர் இரண்டு பேரை கொன்று சமைத்து கொண்டிருப்பதாக கூறி போலீசாரின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதித்துள்ளார்.
பிரிட்டனில் ketie என்ற பெண் ஒருவர் காவல் துறையினரை அழைத்து தன்னிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பவும் அழைத்த அவர் தான் ஒருவரை கத்தியால் குத்தி விட்டதால் உடனே வருமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே அந்த வீட்டுக்கு வந்துள்ளனர். கதவை திறக்க மறுத்த அந்த பெண் காவலர்களிடம் உள்ளே நுழைந்தால், நான் என் கையை கிழித்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பின்னர் தன் தலையை கதவில் முட்டிக் கொண்ட அவர் தன் வீட்டிலிருந்து இரண்டு ஆண்களைக் கொன்று அடுப்பில் சமைத்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முயன்ற போது, “உன்னை துண்டு துண்டாக வெட்டி கொன்று புதைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். மேலும் தனக்கு சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிறகு அவருடைய கையில் இருந்தது கத்தி இல்லை, கரண்டி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அந்தப் பெண் இரண்டு பேரை கொன்று சமைத்து கொண்டிருப்பதாக கூறினாரே என்று அறைக்குள் காவல்துறையினர் நுழைந்துள்ளனர்.
ஆனால் அங்கே இரண்டு ஆண்கள் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டுள்ளனர். உண்மையில் அவர்கள் மூன்று மணி நேரம் நடந்த எதுவும் தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து அந்த பெண் காவல்துறையினரின் நேரத்தை வீணடித்ததற்காக அவரை கைது செய்துள்ளனர். ஆனால் அவருக்கு மனநிலை பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு 300 பவுண்டுகள் மட்டும் அபதாரம் விதித்தும், 18 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.