விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் சீசன்-3 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுப்பாளினி பிரியங்கா கலகலப்பாக தொகுத்து வழங்கினார்.
இன்னோரு maas show on the way! 😍 #StartMusic Season 3 – வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #StartMusic #VijayTelevision pic.twitter.com/YIBCZawrp8
— Vijay Television (@vijaytelevision) October 4, 2021
இந்நிலையில் ஸ்டார்ட் மியூசிக் சீசன் -3 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளதால் அவருக்கு பதில் ஸ்டார்ட் மியூசிக்-3 நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது இந்த கலக்கலான புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.