Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சீசன் முடிவடையும் நிலையில்… விற்பனைக்காக குவிந்த மூட்டைகள்… மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!

சீசன் முடிவடையும் நிலையில் பருத்தி முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வைத்து வாரம் ஒருமுறை பருத்தி சந்தை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த சந்தைக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள 80 விவசாயிகள் 268 பருத்தி மூட்டைகளை மொத்த விற்பனைக்காக கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து சத்தியமங்கலம். அன்னூர். திருப்பூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், கொங்கணாபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் பருத்தி முட்டையை வாங்கிக்கொண்டு விற்பனை செய்தனர்.

அதில் என்.ஆர்.ஏ ரகம் பருத்தி ஒரு குவின்டால் அதிகமான விலையாக  7,070 ரூபாய்க்கும் குறைந்த விலையாக 5,509 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர். இதனால் 5,02,000 ரூபாய்க்கு  பருத்தி விற்பனையாகியுள்ளது. மேலும் சென்ற வாரம் பருத்தி விற்பனைக்காக சந்தைக்கு 595 மூட்டைகள் வந்துள்ளது. இப்போது சீசன் முடிவடையும் நிலையில் சந்தை விற்பனைக்காக 268 பருத்தி மூட்டைகள் வந்துள்ளதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |