Categories
தேசிய செய்திகள்

சீச்சீ… ஆறு மாதமாக ஒரு பெண் நாயை…. 65 வயது முதியவர் செய்த அட்டூழியம்… கொடூரம்..!!

65 வயதுடைய முதியவர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நாயை ஆறு மாதமாக பாலியல் வன்புணர்வு செய்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின், புனே மாவட்டத்தில் உள்ள காலனியில் 65 வயதுடைய நபர் ஒருவர் பார்க்கிங் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அவர் தனியாக தூங்குவதால் அந்த முதியவர் அந்த நாயை தனக்குத் துணையாக படுக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்த நாயை அந்த முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள மிருக பாதுகாவலர் அறக்கட்டளை சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர் .அப்போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 6 மாதமாக அந்த பெண் நாயை அந்த முதியவர் பாலியல்  துன்புறுத்தல் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சியை ஆதாரமாகக் கொண்டு மிருக பாதுகாவலர்கள் காவல் நிலையத்தில் அந்த முதியவர் மீது புகார் அளித்தனர். மேலும் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோவையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |