நாயுடன் உடலுறவு மேற்கொண்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 67. இவர் வீட்டின் அருகில் வசிக்கும் முகேஷ் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் திடீரென காணாமல் போனது. எங்கு தேடியும் அந்த நாய் கிடைக்கவில்லை. பின்னர் சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் முதியவரின் வீட்டிலிருந்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து சந்தேகமடைந்த முகேஷ் ஜன்னல் வழியாக முதியவரின் வீட்டை எட்டி பார்த்துள்ளார்.
அப்போதும் முதியவர் சுரேஷ் நாயின் மீது சாய்ந்து அதனுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகேஷ் அதனை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் முதியவரின் வீட்டிற்குள் சென்று அவரிடமிருந்து நாயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் எடுத்த வீடியோவை ஆதாரமாக காண்பித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.