Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீட்டு பணத்தை கட்டு…. “தகாத வார்த்தைகளால் திட்டியதால்”.… பெண் எடுத்த சோக முடிவு…!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வேலு. இவருக்கு சரண்யா(32) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சரண்யா அப்பளக் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்த சாந்தி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்தி வருகின்றார். அவரிடம் சாந்தி ஒரு லட்ச ரூபாய் சீட்டு போட்டு இருந்துள்ளார். அப்போது சரண்யா சீட்டு பணத்தை எடுத்து விட்டு சில மாதங்களாக பணத்தை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன் சரண்யா வீட்டிற்கு சென்று, சாந்தி சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என்று தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சரண்யா கடந்த 23 ஆம் தேதி அன்று எறும்பு பவுடரை கலக்கி குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த சரண்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு சாந்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |