Categories
அரசியல் மாநில செய்திகள்

சீண்டாதீங்க…! தலை மேல ஏறி உட்காந்திருவோம்…. ஹெச்.ராஜா எச்சரிக்கை…!!!

தமிழக பாஜக சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கபாடி போட்டி நடத்தப்பட்டது. இதில் எச்.ராஜா கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழக அரசானது, மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் வழிபாட்டுத் தலங்களை திறக்கப் போவதாக கூறுகிறது. இந்து சமய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி கோரும் நீங்கள் பிற மத வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு மட்டும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கினார்களா ?போலீசார் மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய வந்தவர்களை துரத்தி அடித்துள்ளனர்.

இந்து விரோத அரசாக தமிழக அரசு மாறியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்லாத இந்து விரோதி ஆக உள்ளார். பாஜக இவ்விரோத செயல்களை வேரோடு களைந்து எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இம்முயற்சியானது ஆன்மிகத்திற்கும், இந்து விரோதத்திற்கும் இடையேயான போர் ஆகும். மேலும் கோவில்களில் அறங்காவலர் இல்லாத நிலையில் அக் கோவிலில் காவலரை நியமனம் செய்யக் கூட முதலமைச்சருக்கோ அறநிலையத்துறை அமைச்சருக்கோ அதிகாரம் கிடையாது. தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சிதலமடைந்துள்ளன.

இவற்றை அறநிலையத்துறை ஆனது பொறுப்பெடுத்து சீரமைக்க வேண்டும். ஆனால் அவை எதனையும் இத்துறையானது கையிலெடுத்து செய்யவில்லை. இவ்வாறு இருக்கையில் நல்ல நிலையில் உள்ள கோவில்களை கையில் எடுத்து நாசம் செய்கிறது. நாங்கள் குயின்ஸ்லேன்ட்ஐ மீட்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் பொதுப் பட்டியலில் கோவில்களின் அறக்கட்டளைகள் உள்ளன. இதனை அடுத்து அவர்கள் பாஜகவை ஏதேனும் சீண்டினால் இதற்கு கைமாறாக கோயில்கள் மற்றும் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிட்டு அவர்களின் தலையின்மேல் அமர்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |