துல்கர் சல்மான், மிருநாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பல நடித்த திரைப்படம் சீதாராமம். அனுராகவ புடி இயக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீசாகி உள்ளது இந்த நிலையில் இது பற்றி நடிகை மிருநாள் தாக்கூர் பேசிய போது, சீதாராமன் மூலம் தென்னிந்திய திரையுலகில் எனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைவிட சிறப்பான அறிமுகம் கிடைக்க வாய்ப்பில்லை இந்த படத்திற்காக கிடைத்த வரவேற்பு நம்ப முடியாது. மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக இது அழகான இனிமையான கதையை கொண்ட படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதனால் அதிகமானவர்களை சென்றடையும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஒரு நடிகையாக இந்தியிலும் தென் இந்திய சினிமாவிலும் சிறந்ததை பெற்றிருப்பது உத்வேகத்தை தருகிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.