Categories
உலக செய்திகள்

“சீனா”வின் அத்துமீறல்…. துப்பாக்கி முனையில்…. கொந்தளிக்கும் பொதுமக்கள்…. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!

சீனாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மீறிய 4 பேரை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் சாலையில் அவர்களது புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

சீனாவிலுள்ள jingxi என்னும் பகுதியில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் மிகக்கடுமையான விதிமுறைகளை அங்கு பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று jingxi நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேரை புதிதாக பாதித்துள்ளது.

இந்நிலையில் jingxi நகரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 4 பேரை காவல்துறை அதிகாரிகள் அவர்களது புகைப்படம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்த வைத்து சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார்கள். இவர்களுடைய இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

ஏனெனில் கடந்த 2010-ஆம் ஆண்டிலேயே சீனாவில் குற்றவாளிகளை பொது இடங்களில் வைத்து அவமதிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது காவல்துறை அதிகாரிகள் மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை கையில் எடுத்துள்ளது jingxi நகர மக்களிடையே மிகந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |