Categories
உலக செய்திகள்

சீனாவின் உளவு கப்பல் “யுவான் வாங்-5” இலங்கைக்கு வருகை…. வெளியான தகவல்….!!!!

சீனாவின் உளவுகப்பல் யுவான் வாங்-5 வரும் செவ்வாய்கிழமை இலங்கை கொழும்பு அருகேயுள்ள ஹம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிறகு இந்த கப்பல்மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியா-சீனா இருநாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். முடிவில் சீனாவின் கப்பலுக்கு அனுமதியளிப்பதென முடிவுசெய்துள்ளனர். இதனால் உளவு கப்பலானது நாளைமறுநாள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துவிடும். வரும் 22-ஆம் தேதிவரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 தினங்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக்கூடாது என இலங்கை நிபந்தனை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எனினும் சீனா இதையெல்லாம் கண்டிப்பாக மதிக்காது. ஆகவே அது உளவு தகவல்களை சேகரிக்கும்.  தமிழ்நாட்டிலிருந்து ஏறத்தாழ 150கி.மீ. தொலைவில் ஹம்பாந் தோட்டை துறைமுகம் உள்ளது. ஆனால் உளவு கப்பல் வாயிலாக 750 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு மேற்கொள்ள முடியும். சீன நாட்டில் தேசிய விண்வெளி ஆய்வுமையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. விண்வெளி ஆய்வுக்கு மட்டும் இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என பொதுவாக சீனா கூறிகொள்கிறது. இருப்பினும் முழுக்க முழுக்க உளவு பார்க்கும் வேலையைத் தான் செய்கிறது. இதேபோல் 7 உளவுகப்பல்களை சீனாவானது வைத்திருக்கிறது. அந்நாட்டிடம் உள்ள மிகப்பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல்தான். இதன் காரணமாகதான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது.

இந்தியாவில் எல்லைக்கு மிகமிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதன்முறையாகும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 11 ஆயிரம் டன் எடை கொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை உடையது. கடல்சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உட்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் உள்ளது. ஆகவே இந்த கப்பல் சேகரிக்கக்கூடிய  அனைத்து தகவல்களும் சீனாவின் இராணுவ புலனாய்வு அமைப்பிற்கு அடுத்த நொடியே சென்று சேர்ந்து விடும். இது தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது. இந்நிலையில் உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்றுகொள்ள முடியாது என்று இலங்கை எம்பி சர்த் வீரசேகர் தெரிவித்து இருக்கிறார். இந்தியா,அமெரிக்காவின் தேவைக்காக இலங்கையின் வெளி விவகார கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது என்ற அவர், சீனா இந்தியாவை உளவுபார்க்க அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார். இந்தியாவை கடல்பரப்பில் இருந்தவாறே சீனா உளவு பார்க்க முடியும் எனவும் அதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை எனவும் சர்த் வீரசேகர் கூறியுள்ளார்.

Categories

Tech |