ரஷ்ய மற்றும் சீன நாட்டின் தலைவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு தைவான் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் அதிபரான புடின் சீனாவிற்கு நேற்று சென்றுள்ளார். அதன்படி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்பாக வெளியான கூட்டறிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது அந்த கூட்டறிக்கையில் ரஷ்யா சீனாவின் ஒரே கொள்கையை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா தைவான் மக்களின் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தைவான் மக்கள் கூட்டறிக்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த அறிக்கை தைவான் மக்கள் சீனாவின் மீது வைத்திருக்கும் வெறுப்பை அதிகரிப்பதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.