சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார்.
உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா சீனாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டது. உலக நாடுகள் முழுவதிலும் தொற்று தீவிரமாக பரவி வருவதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தொற்றை தடுக்கும் மருந்து சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று பல நாடுகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளன. உலக நாடுகளுக்கு பரவ காரணமாக இருந்த சீனாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்நாட்டில் தடுப்பு மருந்து இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேசில் அதிபர் சீனாவின் தடுப்பு மருந்தை வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் ஒருவர் சீனா கண்டறியும் தடுப்பு மருந்தை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தியதற்கு பதில் கொடுத்த அதிபர் போல்சனாரோ சீனாவின் தடுப்பு மருந்தை நிச்சயமாக வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.