உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடுமையான படையெடுப்பு காரணமாக உலகநீதி அமைப்பிலிருந்து ரஷ்யாவை துண்டிக்க உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது 12 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் ரஷ்யா வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல், ஏவுகணை வீச்சு என உக்கிரமான தாக்குதலை நடத்தி, அந்நாட்டை உருக்குலைய வைத்து உள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வந்துள்ளது. இதையடுத்து ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக ரஷ்யாவில் இயங்கும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா மற்றும் மாஸ்டர் கார்டு உள்ளிட்டவற்றில் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு ரஷ்யாவை தனிமைப்படுத்தி பல வெளிநாட்டு நிறுவனங்கள் உலக நீதி அமைப்பிலிருந்து ரஷ்யாவை துண்டிக்க உள்ளதால், எல்லை தாண்டி பணம் செலுத்துவதற்கான புதிய வழிகளை ரஷ்யா கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் சீனா யூனியன் பே கார்டுகளை பயன்படுத்துவதாக முடிவு செய்துள்ளது. அதாவது 150 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள கடைகளில் சீனாவின் யூனியன் பே கார்டுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ஆன்லைன் ஸ்டோர்களில் ஏற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.