சீனா நிறுவப்பட்டதன் 71 ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லையில் மோதல் போக்கு அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சீனா நிறுவப்பட்டதன் 71 ஆவது நிறுவன நாள் கடைபிடிக்கப்பட்டது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை சீனாவிற்கு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீன மக்களின் குடியரசு நிறுவப்பட்டது 71 ஆம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு சீன வெளியுறவு மந்திரி யங் இ, சீன அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.