Categories
உலக செய்திகள்

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது எப்படி ….!!

சீனாவில் இருந்து கொரோனா பரவியதை குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு குழு ஒன்றை நியமித்துள்ளதால் சீனாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

தற்போது உலக மக்கள் தொகையான 700 கோடியில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகிற்கு பரவியது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை வைரஸ் பரவல் குறித்து இந்த குழு புதிதாக மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தால் உலக நாடுகளின் கடும் விமர்சனத்திற்கு சீனா ஆளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |