Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீனாவிலும் வெளியாகும் “மாமாங்கம்” …!!!படக்குழுவினர் மகிழ்ச்சி …!!!

சீனாவிலும் ” மாமாங்கம்” திரைப்படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 

நடிகர் மம்முட்டி நடிப்பில்தற்போது வெளியான படம் மாமாங்கம் .வரலாறு பேசும் படமாக உருவான இப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது .சுமார் 45 நாடுகளில் 2000 தியேட்டர்களில் வெளியான இந்த  படம் வசூல் ரீதியாக முன்னேறிவருகிறது .

Image result for mamangam

 

இந்நிலையில் மாமாங்கம் படத்திற்கு மற்றொரு சிறப்பு பெருமை ஒன்று சேர்ந்துள்ளது. ஆம்.. தங்கல்,பாகுபலி,2.0 படங்களை தொடர்ந்து மாமாங்கம் படமும் சீனாவில் வெளியாக உள்ளது. இப்படத்தை சீனாவில் வெளியிட ஹாங்காங்கை சேர்ந்த  மிகப்பெரிய வெளியீடு நிறுவனம் ஒன்று மிக பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. மாமாங்கம் பட தயாரிப்பு நிறுவனமே   அதிகாரப்பூர்வமாக தனது  டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளது .

Categories

Tech |