Categories
உலக செய்திகள்

சீனாவில் ஆண்ட் நிறுவனத்தின்….. பங்குகளை விற்க முடிவு?….வெளியான பரபரப்பு தகவல்….!!!

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் நிறுவனம் அலிபாபா இதனுடைய தலைவர் ஜாக் மா ஆவார். சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாக தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா ௪௨௦ பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது. இதன் மூலம் ஜாக் மாவும் சீனாவின் பெரிய பணக்காரனாக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவை உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமா ஜாக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தனது நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்கும் சீன அரசியல் செயல் பழமைவாதம் என்று ஜாக் மா விமர்சித்தார். அதனை தொடர்ந்து ஜாக் மாவுக்கும் சீன அரசு பல இடையூறுகளை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக் மாவைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் பொதுவெளியில் தலை காட்டாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறந்தே வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் ஐரோப்பாவில் இருக்கும் செய்தி வெளிவர தொடங்கி உள்ளது. அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்திருப்பதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவனம் சீனாவின் மிகப்பெரிய மொபைல் வலை ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான அலிபாபா செயல்படுத்தி வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஆண்ட் நிர்வன பங்கு தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த தகவலை ஆண்ட், அலிபாபா மற்றும் நிர்வாகிகள் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறது. அதனை போல சீனாவின் மத்திய வங்கியும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது

Categories

Tech |