சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூலிழைகள் பட்டன் , ஜீப் உள்ளிட்ட ஆடை தயாரிப்பு தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் சேர்க்கமடைந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன் , ஜீப், லேஸ் உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகளில் இணைந்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீன ராணுவத்தின் அத்துமீறலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்துள்ளது.
இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆடை உற்பத்தி கருவிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் துறைமுகங்கள் விமான நிலையங்களில் தேக்கி வைக்கப்படுகின்றன. இது ஏற்றுமதி ஆடை உற்பத்தி துறையினருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆர்டர் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனவால் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிறுவனங்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.