சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த வைரஸை கண்டறிந்த மருத்துவரே அதன் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். எனினும் தற்போது வரை கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டைனர் ஒன்றில் விலங்குகள் பிரத்தேயமாக கொண்டுவரப்படும் கூண்டில் ஒன்றில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பரவி வரும் நிலையில் பூனையை அனுப்பியது யார்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூனை மற்றும் கண்டைனரில் இருக்கும் பொருட்களை மீண்டும் சீனாவிற்கே அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.