BF-7 வைரஸ் மாறுபாட்டின் பரவலால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றம் உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர். அதாவது சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
அங்குள்ள ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டதே அதற்குக் காரணம் எனவும், சீனாவின் முழு மக்களும் இப்போது ஒரே நேரத்தில் வைரஸுக்கு ஆளாகியிருப்பதால் அதிக மாறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.