Categories
உலக செய்திகள்

சீனாவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கொரோனா… வெளியாகிய அதிரவைக்கும் தகவல்…!!!

கொரோனா வைரஸ் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டாலும், அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார பல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை உலக அளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.72 லட்சத்தை எட்டியுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் ஒரு நாம் பாதிப்படைந்த அவர்களின் எண்ணிக்கையும் மூன்று கோடியை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 1.45 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் ஒரு சுங்க தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 6 பேர் வவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை செய்து முடித்த பிறகு நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 3 பேருக்கு காய்ச்சல், வரட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பல்வேறு அறிகுறிகள் தென்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளனர். அதே சமயத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், தற்போது அது ஒரு நாவலின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி கோரோணா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் தாங்கள் நினைத்த அனைத்தையும் மறு பரிசீலனை செய்வதற்கு அதிலுள்ள சான்றுகள் வழிவகுத்துள்ளன என்றும் கூறியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு நோய் தொற்றால் இறந்த தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வு செய்ததில் கொரோனா தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |