சீனாவின் சியான் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்தப் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 12 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் பலருக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.