நாளை தொடங்க இருக்கும் இருபதாவது கம்யூனிஸ்ட் தேசிய கட்சியின் மாநாட்டில் தொடங்கும் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் சட்ட திருத்தத்தை ஜின்பிங் கொண்டு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றார்கள் இதனால் நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் சாலை மேம்பாலத்தில் ஜிஜின்பிங்கிற்கு எதிராக பேனர் தொங்கவிடப்பட்டிருக்கிறது. மாண்டரின் மொழியில் எழுதப்பட்டிருக்கின்ற இந்த பேனரில் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி எனவும் அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு சீர்திருத்தம் தேவை கலாச்சாரப் புரட்சி அல்ல நாம் கொரோனா பரிசோதனை செய்யாமல் சாப்பிட வேண்டும் என்பது முக்கியத்துவம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேனர்களை வைத்தவர்களை சீன போலீசர் தேடி வருகின்றனர் ஆனால் அவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சீனாவில் போராட்டம் என்பது மிகவும் அரிதான ஒன்றாகும் அதிலும் இதுபோன்ற உயர்மட்ட கூட்டம் நடைபெறும் போது பிஜிங்கில் அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட போராட்டப் பதாகைகள் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவை உடனடியாக அகற்றப்பட்டது பீஜீங்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்காக தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் சீன அதிபர் மற்றும் அரசின் கடுமையான கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முக்கிய வார்த்தைகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை சீன அரசின் சமூக ஊடக தணிக்கையாளர்கள் தடுத்திருக்கின்றனர். சீனாவில் ட்விட்டருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் வெய்ப்போ வலைதளத்தில் அரசுக்கு எதிரான பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சில ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த முடியாத வகையில் சென்சார் செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக மக்கள் வேறு சில ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் அவற்றை சீன அரசின் சமூக ஊடக தணிக்கையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றார்கள்.