சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன நாட்டினர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளாக செல்கிற வாய்ப்பு அதிகரிக்கிறது. அதே சமயம் அவர்கள் சீனாவில் இருந்து மற்ற நாடுகளில் கொரோனாவை பரப்பும் ஆபத்தும் உள்ளது என கூறப்படுகிறது.