தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இபின் நகரின் சிங்வென் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியிருக்கலாம் என சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சாலையோரங்களில் கட்டிடங்கள் வைத்திருப்பவர்கள் அலறியடித்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. நடுக்கத்தால் மண்சரிவு ஏற்படும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories