உலகிலேயே முதல்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. தற்போது பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன.
ஏனெனில் தற்போது மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதாவது டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவுவதை தகவல் வெளியாகியுள்ளது. இவற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து நாடுகளும் தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றது. இந்நிலையில் உருமாறிய டெல்டா வைரஸின் பரவல் சீனாவில் 15 நகரம் தீவிரமடைந்து உள்ளதாக சீனப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளனர். சுமார் 175 நாட்களுக்கு பிறகு சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.