சீனாவின் ஷாங்காய்நகரில் ஒரே நாளில் 27 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களில் 2 ஆயிரத்து 573 நபர்களுக்கு அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது ஆகும்.
இந்த நிலையில் தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். இதற்கிடையில் கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.