நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடித்த திரைப்படம் கனா. இப்படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவர் கபாலி திரைப்படத்தின் நெருப்புடா பாடல் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கனா திரைப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் கனா திரைப்படத்தின் அறிமுக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த புரொடக்ஷன் மூலம் தயாரித்தார்.
Super happy to share that our @SKProdOffl 's debut film #Kanaa is now all set to release in China on March 18, 2022👍😊
A proud moment for our entire #Kanaa team👏👏👏💪 @Yishifilms @KalaiArasu_ @Arunrajakamaraj #Sathyaraj sir @aishu_dil @Darshan_Offl @dhibuofficial pic.twitter.com/5YTKioM5nF— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 25, 2022
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மார்ச் மாதம் 18-ஆம் தேதி இத்திரைப்படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.