Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வரிசையாக ஆப்பு…. பதவிக் காலம் முடிவதற்குள்…. ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை….!!

அதிபர் ட்ரம்ப் தனது பதவியின் கடைசி நாட்களில் சீனாவுக்கு பெரிய அடி கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பைடன் வருகிற ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.  மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில் பல திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் இந்த கடைசி காலங்களில் சீனாவுக்கு எதிராக கடுமையான பல நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறார் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இனிவரும் நாட்களில் சீனா மீது பொருளாதார ரீதியாக கட்டுப்பாடுகளை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட சர்வதேச எல்லை பிரச்சினைகளுக்கு கூட சில முக்கிய முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

சீனாவின் முதலீடுகளுக்கு தடை, மீன்பிடிக்கும் திட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடை நடவடிக்கைகளையும் எடுக்கப் போகிறார். மேலும் சீனாவில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு கூட விசா எடுக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து வரும் காலங்களில் பைடனின் ஆட்சியின் கீழ் மாறவே முடியாத அளவிலான பிரச்சனையை எல்லாம் கொண்டு செல்ல முயன்று வருவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |